
அப்போலோ மருத்துவமனையில் கிட்டத்தட்ட 75 நாட்கள் இருந்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பற்றி அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிக்சை அளித்த அப்பல்லோ மருத்துவ மனை துணை இயக்குநர் சங்கீதா ரெட்டி ஜெயலலிதாவை பற்றி சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
சிகிச்சையின்போது பல நேரங்களில் சிாித்த முகத்துடன் காணப்படுவாா் என்றும், செவிலியா்கள் அணிந்திருக்கும் உடை பற்றி பேசுவார் என்றும் சங்கீதா ரெட்டி தொிவித்துள்ளாா்.
” ஹைதராபாத் சபர்மதி ஆற்று கழிவை சுத்தப்படுத்தியது போல…கூவம் ஆற்றை சரிசெய்யுங்கள் மேடம்” என்று ஒருமுறை முதலமைச்சரிடம் கேட்டு இருக்கிறார் சங்கீதா ரெட்டி. அதற்கு, ‘நிச்சயமாக, நான் சரியானவுடன் செய்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார் நமது மறைந்த முதல்வர். ஆனால், எதிா்பாராத விதமாக இயற்கை அவருக்கு எதிராக மாறி அழைத்துக்கொண்டு, தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது.