ஜெ. மரணம் - +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை... சோகத்தின் உச்சம்

First Published Dec 8, 2016, 10:46 AM IST
Highlights


பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வந்தார்.

தொடக்க கல்வி முதல் கல்லூரி கல்வி வரை அவரது திட்டங்களால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாணவ மாணவிகளும் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு அதிமுக தொண்டர்களை மட்டுமல்ல மாணவ மனைவிகளையும் வெகுவாக பாதித்துள்ளது.

அவரது இழப்பை தாங்கமுடியாமல் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு கரிமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவற்றின் மகள் பெரியநாயகி அங்குள்ள பள்ளியில் +1 படித்து வந்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையும் அதனை தொடர்ந்து தொலைகாட்சியில் அவரது இறுதி ஊர்வலத்தையும் சோகத்துடன் பார்த்து கொண்டிருந்த பெரியநாயகி துக்கம் தாளாமல் கதறி அழுதுள்ளார்.

இதனையடுத்து மிகுந்த மனவேதனை அடைந்த அவர் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இது போன்று மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் தொழிலாளர்கள்,விவசாயிகள்,பெண்கள் என அனைவருமே முதலமைச்சர் ஜெயலலிதாவின் இழப்பை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

click me!