முதல்வருக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் குழு சென்னை வந்தது

First Published Dec 5, 2016, 10:13 AM IST
Highlights


முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பிய நிலையில் விரைவாக குணமடைந்து வந்தார். விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார். டிஸ்சார்ஜ் தேதியையும் அவரே முடிவு செய்வார் என்று அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து இருந்தார்.

முதல்வருக்கு அனைத்து சிகிச்சைகளும் முடிவடைந்த நிலையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்றுவந்தார். நடப்பதற்கான பயிற்சி எடுத்துவந்த நிலையில் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆவார்  என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து இதயநோய், சுவாசவியல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தது. நேற்று முதல்வருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை கண்காணிப்பில் முதல்வர் இருக்கிறார்,

முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, முதல்வர் உடல் நிலை , தமிழக அரசியல் சூழ்நிலை ஆகியவற்றை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளதாக கூறியுள்ளார். முதல்வர் விரைவில் நலமடைவார் என்பதை தாம் நம்புவதாகவும் கூறிய மத்திய அமைச்சர் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ்  மருத்துவர்குழு ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே அக்.6, 7 தேதிகளில் சென்னையில் தங்கி அப்போலோவில் முதல்வருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் குழு இன்று மீண்டும் சென்னை அப்போலோ வர உள்ளது. 

மருத்துவர் கில்நானி தலைமையில் மருத்துவர் குழு ஒன்று அப்போல்லோ வந்து மருத்துவர்களுடன் இணைந்து சிகிச்சை அளிப்பார்கள், 

click me!