முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை... தயார் நிலையில் மத்திய அதிரடிப்படை வீரர்கள்…

First Published Dec 5, 2016, 10:10 AM IST
Highlights


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர்  செல்வி ஜெயலலிதா உடல்நிலையில் நேற்று திடீரென  பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும பரபரப்பு நிலவியது.  இது  குறித்து தகவல் அறிந்த ஆளுநர் திரு, வித்யாசாகர் ராவ்  உடனடியாக தமிழகம் வந்து முதலமைச்சரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர்மற்றும் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு, நிலைமையை கண்காணித்து வருகின்றனர்..

தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீராக இருப்பதாகவும், மாநில அரசுக்கு உதவபோதுமான மத்திய படைகள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு எந்த உதவி கேட்டாலும், அதை அளிக்க தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது-.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய ரிசர்வ்போலீஸ் படையின் 900 விரைவு அதிரடிப்படை வீரர்கள் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும்,தேவைப்படும்போது, அவர்கள் தமிழ்நாட்டுக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசுசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!