
முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனை அளித்த அறிக்கையில் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் , அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நிபுணர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயம்செயலிழந்ததால் தற்காலிகமாக அவருக்கு Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது இதயத்தை செயற்கையாக செயல்பட வைக்கும் ஒரு உபகரணமாகும்.
இந்த கருவி, இதயம் மற்றும் மூச்சு சீராக இருப்பதை உறுதி செய்யும். இப்போது ஜெயலலிதாவுக்கு இந்த உபகரணம்தான் பொருத்தப்பட்டுள்ளதாக அப்போலோ தெரிவித்துள்ளது.
இந்த உபகரணம், ரத்த நாளங்களில் தூண்டுதலை ஏற்படுத்தி அதை உந்தி தள்ளும். ஆக்சிஜனை சேர்த்து கார்பன் டயாக்சைடை வெளியேற்றும். இதயம் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இக்கருவி உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டர்கள் அனைவரும் ஆவலோடு முதல்வர் உடல்நிலை பற்றி எதிர்பார்த்திருக்கும் வேலையில் கவலையளிக்கும் படி இந்த தகவலை அளித்துள்ளது. ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவமனையின் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள் இன்னும் சில மணி நேரத்தில் வந்து சிகிச்சையில் ஈடுபடும்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.