கதறி அழுத ஆளுங்கட்சி எம்.எம்.எல்.ஏக்கள்…ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்குவோம் என உறுதி

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 02:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
கதறி அழுத ஆளுங்கட்சி எம்.எம்.எல்.ஏக்கள்…ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்குவோம் என உறுதி

சுருக்கம்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால், அரசு நிர்வாகம் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்தும், அரசு நிர்வாகம் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் அப்பலோ மருத்துவனையில் இன்று நடைபெற்றது.

மிகுந்த இறுக்கத்துடன் அமர்ந்திருந்த எம்.எம்.எல்.ஏக்கள் ஒரு கட்டத்தில் கதறி அழத்தொடங்கினர். ஏராளமான எம்.எம்.எல்.ஏக்கள் கண் கலங்கினர். சினியர்கள், கதறி அழுத அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இந்த இக்கட்டான நேரத்தில் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்று உறுதியேற்கப்பட்டது. உணர்ச்சிகரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைவரின் முகங்களிலும் முதலமைச்சர் எப்படியாவது குணம் பெறவேண்டும் என்ற ஏக்கம் இருந்ததது என்னவோ உண்மைதான்…

PREV
click me!

Recommended Stories

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை படை.. 8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.. செல்வப்பெருந்தகை கண்டனம்
ஆட்சியின் கடைசி நிமிடம் வரை கொள்ளையடிப்பது தான் கொள்கையா.? திமுகவுக்கு எதிராக கொந்தளிக்கும் அன்புமணி