முதல்வர் ஜெ. தனி வார்டுக்கு மாற்றம் – கேக் வெட்டி அதிமுக தொண்டர்கள் தொடர் கொண்டாட்டம்

 
Published : Nov 21, 2016, 09:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
முதல்வர் ஜெ. தனி வார்டுக்கு மாற்றம் – கேக் வெட்டி அதிமுக தொண்டர்கள் தொடர் கொண்டாட்டம்

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா தனி வார்டுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள், கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலோ, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதலமைச்சரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று முன்தினம் சாதாரண தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். நேற்று காலை முதல் அவருக்கு, பிசியோதெரபி நிபுணர் உடற்பயிற்சி அளித்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ரா.தாஸ், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளிடம், முதல்வர் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

அதே நேரத்தில், அதிமுக தென்சென்னை மாவட்ட மகளிர் அணி தலைவி சரோஜினி சீனிவாசன் தலைமையில் துர்க்கை அம்மன் பூஜை நடந்தது. இதேபோல், விளக்கு பூஜையிலும் அ.தி.மு.க. பெண் தொண்டர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நேர்த்திக்கடனாக 108 தேங்காய்களும் உடைக்கப்பட்டன. அ.தி.மு.க. தொண்டர்கள் கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகம் அடைந்தனர்.

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!