
நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ஜெ. மரணம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
வர்தா புயலால் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் அதற்கான நிதியை உடனடியாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பண விவகார அறிவிப்பால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பணத்தையும் ஊழலையும் ஒழிப்பேன் என்று சொன்னவர், இதுவரை பெருமுதலாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன.
தமிழக சட்டப்பேரவையில் அறுதி பெரும்பான்மை பெற்ற கட்சி, தற்போது அக்கட்சியின் முன்னாள் முதல்வர் மற்றும் பொதுச்செயலாளர் அவர்கள் காலமானதால், அந்த பலவீனத்தை பயன்படுத்தி ஆட்சியையும், கட்சியையும் சிலர் தனதாக்கி கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது அரசியல் நாகரிகம் அல்ல. மறைந்த முதல்வர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் உறுதியாக இருப்பார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவோ, மர்மம் இல்லை என்று கருத்து கூறவோ நான் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.