
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து, அரசியலாக்க விரும்பவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்தித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விசாரித்தார். அவர் விரைவில் நலம் பெற தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மற்றபடி, கருணாநிதியை சந்தித்ததில் அரசியல் எதுவும் இல்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.