ஜெ இறந்ததால் அதிர்ச்சி மரணம் - மேலும் 203 பேருக்கு நிதியுதவி

Asianet News Tamil  
Published : Dec 10, 2016, 12:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
ஜெ இறந்ததால் அதிர்ச்சி மரணம் - மேலும் 203 பேருக்கு நிதியுதவி

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின்  மறைவு செய்தி கேட்டு பல்வேறு வகைகளில் மரணமடைந்த 203 பேர் குடும்பங்களுக்‍கு குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 6கோடியே 9 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அ.இ.அ.தி.மு.க. தலைமைக்‍ கழகம் அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜெயலலிதாவின்  மறைவு செய்தி கேட்டு பல்வேறு வகைகளில் மரணமடைந்த 203 பேரின் குடும்பங்களுக்‍கு குடும்பநல நிதியுதவியாக கழகத்தின் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 6 கோடியே 9 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அ.இ.அ.தி.மு.க. தலைமைக்‍ கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

உயிர்நீத்த கழக உடன்பிறப்புகள் 203 பேரின் குடும்பங்களுக்‍கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‍கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்‍கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும், தலைமைக்‍ கழக செய்திக்‍குறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயல்லிதா இறந்த செய்தி கேட்டு உயிரிழந்த்த 77 பேருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் 2 கோடியே 31 லட்சம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது,

PREV
click me!

Recommended Stories

திடீர் ட்விஸ்ட்..! தவெகவில் இணையும் பாஜக Ex மத்திய அமைச்சர்..! தட்டித் தூக்கும் விஜய்..!
ஜனநாயக விழுமியங்களையும் ஆளுநர் அவர்கள் முறையாகக் காப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்