இறப்பில் சந்தேகம்; புதைத்த சடலத்தைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வு…

Asianet News Tamil  
Published : Dec 10, 2016, 11:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
இறப்பில் சந்தேகம்; புதைத்த சடலத்தைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வு…

சுருக்கம்

தேனியில் மர்மமான முறையில் உயிரிழந்து நகராட்சி சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இளைஞரின் சடலத்தை வெள்ளிக்கிழமை தோண்டு எடுத்து உடற்கூராய்வு செய்யப்பட்டது.

தேனி, சிவாஜி நகரைச் சேர்ந்தவர் மாயாண்டி மகன் சுந்தரபாண்டி (22). இவர், காணாமல் போய் விட்டதாக அவரது தாயார் இராஜாமணி தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் சுந்தரபாண்டியின் அண்ணன் பாண்டியராஜிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.

இதில், கடந்த டிசம்பர். 5-ஆம் தேதி விசுவதாஸ் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த சுந்தரபாண்டி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது சடலத்தை தேனி நகராட்சி சுடுகாட்டில் புதைத்து விட்டதாகவும் பாண்டியராஜ் கூறியுள்ளார்.

சுந்தரபாண்டியின் சாவில் மர்மம் உள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரிய வந்ததால், தேனி நகராட்சி சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த அவரது சடலத்தை தேனி வட்டாட்சியர் சொரூபராணி, தேனி காவல் நிலைய ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுத்தனர்.

பின்னர், அதே இடத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலர் கோகுலபாண்டி சுந்தர் உடற்கூராய்வு நடத்தினார்.

இதுகுறித்து, மேலும் விசாரணை தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் பேசும்போது அதிர்ச்சி.. பக்கத்தில் மயங்கி சரிந்த மா.செயலாளர்.. பதறிய தொண்டர்கள்.. என்ன நடந்தது?
திமுகவின் லாரி மக்கர் பண்ண ஆரம்பிச்சுருச்சு.. உங்க கூட்டணி நிலைக்காது.. எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி!