கள்ளத்தனமாக மது விற்பனை; 45 பேர் கைது…

First Published Dec 10, 2016, 11:21 AM IST
Highlights


தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாள்களில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்றதாக 45 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார்களை மூட அரசு உத்தரவிட்டிருந்தது.

இதன்படியே மூன்று நாள்கள் மதுக்கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றிய தகவல்களை அறிந்த காவலாளர்கள், மது விற்கப்பட்ட இடங்களுக்கு சென்று அனைவரையும் கைது செய்தனர்.

இதுவரை, அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக மொத்தம் 45 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 204 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடைகள் மூடப்பட்ட நிலையில், இவர்களுக்கு எப்படி மது பாட்டில்கள் கிடைத்தது என்று காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags
click me!