ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா..! – மத்திய அரசுக்கு வேண்டுகோள்

First Published Dec 10, 2016, 11:48 AM IST
Highlights


முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 5ம் தேதி திடீர் மாரடைப்பு காரணாக, நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனக்கென வாழாமல் தமிழக மக்களுக்காகவே, தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். அவரது மறைவால், தமிழக மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முதலைமைச்சர் ஜெயலலிதா, நமது நாட்டிலேயே தமிழகத்தில் பல்வேறு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளார். இந்த திட்டங்கள் காலத்தினாலும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

எனவே, ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசின் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!