ஜெயலலிதாவின் ஹைதராபாத் பங்களா யார் பெயரில் உள்ளது? திடுக் தகவல்…

 
Published : Feb 17, 2017, 06:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
ஜெயலலிதாவின் ஹைதராபாத் பங்களா யார் பெயரில் உள்ளது? திடுக் தகவல்…

சுருக்கம்

ஜெயலலிதாவின் ஹைதராபாத் பங்களா யார் பெயரில் உள்ளது? திடுக் தகவல்…

மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது ஹைதராபாத்தில் உள்ள பங்களா மற்றும் திராட்சை தோட்டம்தான்.

இதேபோன்று கோடநாடு எஸ்டேட், பல்லாயிரக்கணக்கான நிலங்கள், பையனுர் பங்களா என வருமானத்துக்கு அதிகமாக ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு 21 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வெளியானது. அதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததுடன் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து  ஜெயலலிதா வாங்கிய சொத்துக்களை  கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடநாடு எஸ்டேட் மற்றும் பையனூர் பங்களா ஆகிய சொத்துக்கள் தீர்ப்பின்படி முடக்கப்படும் பட்டியலில் உள்ளன.

இவை தவிர ஜெயவலிதாவின் பெயரில் உள்ள பல்வேறு கொத்துக்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஜெயலலிதா பெயரில் எந்தெந்த சொத்துக்கள் உள்ளன என்பது குறித்து இதுவரை மர்மமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பங்களா மற்றும் திராட்சைத் தோட்டம் ஆகியவை மற்றவர்களின் பெயருக்கு மாற்றப்படுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல் செகந்திராபாத் ராதிகா காலனியிலும் ஜெயலலிதா ஒரு பங்களா வாங்கியிருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர் தன் வேட்புமனுவில் இந்த சொத்துக்கள் குறித்து தகவல் அளித்திருந்தார்.

இந்த நிலையில்தான் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பங்களா பங்களா சசிகலா பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அந்த  பங்களாவில் ஒரு குடும்பத்தினர் தங்கியிருந்தனர் என்றும் அவர்கள் வெளியேறிய நிலையில் கடந்த 3 மாதங்களாக அது  புதுப்பிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ராதிகா காலனி பங்களாவுக்கான சொத்து வரி கடந்த 2 ஆண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ளதாகவும், அதை உடனே செலுத்தும்படி கேட்டு மாநகராட்சி சார்பில் நோட்டீசு ஒட்டப்பட்டிருந்ததையடுத்துதான் அந்த பங்களா தற்போது சசிகலா பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

குரங்கு கிடைத்த பூமாலை அதிமுக இல்லை, விமர்சனங்கள் கடுமையாக உள்ளபோது நான் விமர்சிப்பேன் - ஜெயக்குமார்
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?