எம்ஜிஆர் பாதி... ஜெ பாதி... சிலை வடித்த கோவை சிற்பி

First Published Dec 10, 2016, 10:41 AM IST
Highlights


தமிழ் திரையுலகிலும், தமிழக அரசியலிலும் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் யாராலும் மறக்க முடியாதவர்களாக திகழ்ந்தனர். அவர்களுக்கென்று தனி தொண்டர்படைகளை உருவாக்கியுள்ளதோடு, மக்கள் மத்தியில் அசைக்க முடியாத செல்வாக்கையும் பெற்றிருந்தனர்.

எம்ஜி,ஆர் மறைந்போது அவரது ரசிகர்கள் அவருக்கு தமிழகம் முழுவதும் சிலைகள் வைத்த்தோடு அவரை போற்றி மகிழ்ந்தனர். அதேபோல் ஜெயலலிதா மறைந்த போதும் அவருக்கு பல்வேறு இடங்களில் ஜெவின உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சிற்பி ஒருவர் டைம் சென்ஸோடு  எம்,ஜி,ஆரின் பாதி முகம், ஜெயல்லிதாவின் பாதி முகம் இரண்டையும் இணைத்து புதிய வடிவில் சிலை ஒன்றை செய்துள்ளார்.

இந்த சிலை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இதை விற்பனைக்கு வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

click me!