“வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ - ஜெயலலிதாவுக்காக ஈழத்தமிழர் எழுதிய பாடல்

Asianet News Tamil  
Published : Dec 10, 2016, 08:48 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
“வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ - ஜெயலலிதாவுக்காக ஈழத்தமிழர் எழுதிய பாடல்

சுருக்கம்

முதல்வர் ஜெயலலிதா மரணம் திரையுலகத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இதையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ என்ற பாடல் சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 5ம் தேதி இரவு காலமானார்.

ஜெயலலிதாவின் மறைவு தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநில மக்களையும் அதிர்ச்சியடைய செய்தது. பல்வேறு துறையினரும், அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதில், முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் திரையுலகத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இதையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ என்ற பாடல் சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்ததாக சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இந்த பாடலை இசையமைத்து பாடியது ‘புறம்போக்கு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான வர்சன். இப்பாடலை எழுதியது ஈழத்தமிழரான பொத்துவில் அஸ்மின்.

இவர் விஜய் ஆண்டனியின் ‘நான்’ படத்தில் இடம் பெற்ற தப்பெல்லாம் தப்பேயில்லை என்ற பாடலை எழுதி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

திருத்தணி சம்பவம் இருக்கட்டும்.! சென்னையில் 60 அடி பாலத்தில் சாகசம் செய்த வடமாநில இளைஞர் ஷாருக்!
படுத்தேவிட்டான் ஐயா மொமண்ட்..! சரணாகதியான எதிர்க்கட்சி.. தொண்டர்களுக்கு முதல்வர் புத்தாண்டு மடல்