ஜெ. மரணத்தில் இருக்கும் மர்மத்தை தெரிந்துகொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு - கவுதமி பளீர் பேட்டி

First Published Dec 9, 2016, 4:46 PM IST
Highlights


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது அவரை பார்க்க அனுமதி மறுத்தது யார்? அவர்  மரணத்தில் இருக்கும் மர்மம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

பிரதமருக்குகடிதம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை மற்றும் திடீர் மரணம் உள்ளிட்டவைகளுக்கு பதில் தெரியாத ஏராளமான கேள்விகள் உள்ளன.  முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுக்கும் போதுகூட அவரை பார்க்கவிடாமல் சிலர் தடுத்தனர். அவர்கள் யார்? எனக் கேட்டுள்ளார்.

மேலும், ஜெயலலிதா குறித்து ஏன் ரகசியம் காக்கப்படுகிறது. அவர் சிகிச்சை பெறுவது தொடர்பான முடிவுகளை எடுத்தது யார்? இதற்கு விடையளிக்க வேண்டியது யார் ?இதுபோன்ற ஏராளமான கேள்விகள் தமிழக மக்களா் கேட்டு வருகின்றனர்.அவர்களின் சார்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன் எனக் கேட்டு இருந்தார்.

பேட்டி

இது குறித்து தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு நடிகை கவுதமி பேட்டி அளித்துள்ளார். அதில்அவர் கூறியிருப்பதாவது

உரிமை உண்டு

ஜெயலலிதா உடல் நிலை தொடர்பாக சந்தேகம் என்பதை விட, அவருக்கு என்ன நடந்தது என்பதே மர்மமாக இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதற்கு அனைவருக்கும் ஆர்வமும் உண்டு உரிமையும் உண்டு .

மக்கள் கேள்வி

ஜெயலலிதா மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர். ஒரு மாநிலத்தின் பொறுப்பு மிக்க தலைமைப் பதவியில் இருந்தவர். அவரின் மரணம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மனதிலும்  இருக்கிறது. இந்த கேள்வியை நான் மட்டும் கேட்கவில்லை. என்னுடைய கேள்வி மட்டும் கிடையாது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மக்களின் மனதிலும் இருக்கும் கேள்வியாகும்

மத்தியஅரசுக்கு அதிகாரம்

பிரதமர் மோடி தான் ஒரு சாமானியர் எந்த பிரச்சினைக்கும் எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். மக்களில் ஒருவர் எனக் கூறியுள்ளார். அந்த நம்பிக்கையில்தான் நான் அவருக்கு கடிதனம் எழுதினேன். அதுமட்டுமல்லாமல், மாநிலத்துக்கு அடுத்தபடியாக அதிகாரம் படைத்தது, மத்தியஅரசு தான், அதை ஏற்கிறீர்கள் தானே. அதனால்தான் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். நான் எழுதிய கடிதம் மக்களின் குரலாக பதிவு செய்தது தனக்குப் பெருமையாக இருக்கிறது.  என்னுடைய கடிதத்திற்கு பிரதமர் மோடி நிச்சயம் பதில் அளிப்பார் என நம்புகிறேன்.

அருங்காட்சியகம்

அதேசமயம், முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும். அவரின் சாதனைகளை விளக்கும் வகையில், அங்கு அவரின் திட்டங்கள் குறித்து அறிவிப்பு இருக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!