“வரும் பொங்கலுக்கு ஜல்லிகட்டு நடக்கும்” - பொன்னார் உறுதி

 
Published : Nov 20, 2016, 04:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
“வரும் பொங்கலுக்கு ஜல்லிகட்டு நடக்கும்” - பொன்னார் உறுதி

சுருக்கம்

தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவையினர் திருச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து ஜல்லிகட்டு மீதான தடைதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,

ஜல்லிகட்டு விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள முயற்சி தோல்விடைந்துள்ளது என்ற கருத்து ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசு சார்பில் ஜல்லிகட்டு தொடர்பாக தொடர்ந்துள்ளவழக்கு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வருகிறது. மத்திய அரசை பொறுத்தவரை முடியாது என்று ஒன்றும் இல்லை என்றும், ஒருசதவீதவாய்ப்பு இருந்தால் கூட அதை 100 சதவீதமாக்கி ஜல்லிகட்டை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளபடும் என தெரிவித்தார்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜல்லிகட்டுடன் கொண்டாட முடியும் என தான் நம்புவதாக தெரிவித்த அவர்,  ஜல்லிகட்டு தடைக்குமத்திய அரசு காரணம் இல்லை எனவும், ஜல்லிகட்டு தொடர்பாக பிரதமரை சந்திக்க தேவை ஏற்படும் பட்சத்தில் சந்திக்கவும், அதுதொடர்பான அமைச்சர்களை சந்திக்க இருப்பதாகவும், தெரிவித்தார்.

மேலும் கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக பிரதமர் கொண்டுவந்துள்ள திட்டத்தை பாமர மக்களும்இளைஞர்களும்வரவேற்பதாகவும்இத்திட்டத்தால் ஏற்படும் சிரமங்களை சாதராண மக்கள் சகித்து கொள்ளாவிட்டால் நாட்டிலுள்ள கருப்பு பணமுதலைகள் தங்களுக்கு சாதமாக்கி கொள்ள நேரிடும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நெல்லை மக்களே ரெடியா? பொருநை மியூசியம்: டிக்கெட் விலை முதல் டைமிங் வரை.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!