கைது செய்யப்பட்ட 487 பேரில் 36 மாணவர்கள் மீதான வழக்கு வாபஸ் - 110 விதியின் கீழ் ஓபிஎஸ் அறிவிப்பு

 
Published : Jan 31, 2017, 12:58 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
கைது செய்யப்பட்ட 487 பேரில் 36 மாணவர்கள் மீதான வழக்கு வாபஸ் - 110 விதியின் கீழ் ஓபிஎஸ் அறிவிப்பு

சுருக்கம்

தமிழகம் முழுதும் கடந்த ஜன.23 அன்று நடந்த கலவரத்தில் கைதான 487 பேரில் 36 பேர் மாணவர்கள் அவர்களது எதிர்கால நலன் கருதி அவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சட்டசபையில் 110 வது விதியின் கீழ் ஓபிஎஸ் அறிவித்தார்.

கடந்த 23 அன்று நடந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சென்னையில் 312 பேர்களும், பிற மாவட்டங்களில் 175 பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கைது செய்யப்பட்டவர்களில் 21 பேரும், இதர மாவட்டங்களில் 15 பேரும் மாணவர்கள். 

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இம்மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அறிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!