“அடுத்த டார்கெட் மணல் திருட்டு…!” – ‘யூனிஃபார்ம்’ போட்ட காவலரின் பேச்சால் மெரினாவில் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Jan 20, 2017, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
“அடுத்த டார்கெட் மணல் திருட்டு…!” – ‘யூனிஃபார்ம்’ போட்ட காவலரின் பேச்சால் மெரினாவில் பரபரப்பு

சுருக்கம்

கடந்த 3 நாட்களான காலையில் ட்யூடி. இரவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்பு என 2 வாழ்க்கை வாழ்ந்து வந்தார் இளநிலை காவலர் மதியழகு. ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட அவர், சென்னை மெரினா கடற்கரையில் போராட்ட கள பகுதியில் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டு இருந்தார்.

விவசாயம், மண்சார்ந்த பிரச்சனைகள் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த காவலர் மதியழகு, நாடு நாசமாவதை பார்த்து, தொடர்நது மனம் குமுறி வந்திருக்கிறார்.

இந்நிலையில் திடீரென இன்று மெரினாவில் கூடியிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் முன்பாக, காவல் துறை சீருடையுடனே, களத்தில் குதித்தார் மதியழகு. அப்போது அவர், மைக் பிடித்து, சீருடையுடன் அவர் பேச ஆரம்பித்தவுடன், அத்தனை கூட்டமும் ஆர்ப்பரித்தது.

ஜல்லிக்கட்டுடன் நமது போராட்டம் ஓய்ந்துவிட கூடாது. இயற்கையையும், விவசாயத்தையும் அழித்து ஒழிக்கும், மணல் திருட்டு, தண்ணீர் திருட்டு ஆகியவற்றுக்கு எதிராகவும், நாம் தொடர்ந்து போராட வேண்டும் என அவர் அரைக்கூவல் விடுத்தார்.

இந்த இளம்காவலரின் பேச்சை கேட்டு, அங்கிருந்த ஆர்ப்பாட்டக்கார்ரகள், பலத்த கரகோஷத்துடன் ஆரவராம் எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு தலைவணங்குவதாக கூறிய அந்த காவலர், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டனத்தை தெரிவித்தார்.

யூனிஃபார்ம் போட்டு கொண்டு, பணியில் இருந்த காவலர் ஒருவர், மத்திய அரசுக்கு எதிராக பேசியதால், அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், காவலர் மதியழகு மீது நடவடிக்கை எடுத்தால், அவருக்கு நாங்கள் தோள் கொடுப்போம் என அங்கிருந்த போராட்டக்காரர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

தங்கத்துடன் போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!
அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கும் பாஜக..? இபிஎஸ் இல்லத்தில் நயினார் ஆலோசனை..