பீட்டாவுக்கு எதிர்ப்பு.... தென் தமிழகத்தில் உச்சகட்ட பாேராட்டங்கள்

Asianet News Tamil  
Published : Jan 20, 2017, 09:08 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
பீட்டாவுக்கு எதிர்ப்பு.... தென் தமிழகத்தில் உச்சகட்ட பாேராட்டங்கள்

சுருக்கம்

பீட்டாவுக்கு எதிர்ப்பு.... தென் தமிழகத்தில் உச்சகட்ட பாேராட்டங்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தொிவித்தும், பீட்டா அமைப்புக்கு எதிா்ப்பு தொிவித்தும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் , மாணாக்கா்கள், இளைஞா்கள், பாெதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவ, மாணவிகள் 3-வது நாளாக போராட்டம் நடத்தினர். 

திருச்செந்தூரில் வ.உ.சி. திடலில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு சிலர், பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் சுற்றி பாரம்பரியத்தை பறைசாற்றினர். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், வெளிநாட்டு குளிர்பான பாட்டில்களை உடைத்தும், பாடைகட்டி ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, மதுரை மாவட்டம் முடுவார்பட்டி, தேவசேரிஉள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

சோழவந்தான், தேனூர், கருப்பட்டி ஆகிய ஊர்களிலும் கிராம மக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பீட்டாவை தடை செய்யக்கோரி தேனி புதிய பேருந்து நிலையம் முன்பு திரண்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே விவசாயிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், அறந்தாங்கி போன்ற இடங்களில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். 

பெரம்பலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையம் முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பீட்டாவை தடை செய்யக்கோரி முழக்கமிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

தேமுதிக யாருடன் கூட்டணி? 'முடிவெடுத்து விட்டேன்'.. ஆனால்?? சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா! முக்கிய அறிவிப்பு!
உள்ளே வரும் முக்கிய கட்சி..! தென் தமிழகத்தில் சறுக்கல்... காத்திருந்து ஏமாந்த திமுக..!