
போராட்டக்காரர்களை அமைதியான முறையில் வெளியேற்றிய போலீசார் 90% கடற்கரையை தங்கள் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மெரினா கடற்கரை கடந்த 6 நாட்களாக போலீசாரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்கள் , இளைஞர்கள் மாணவர்கள் அனைவரும் பெரிய அளவில் போராட்டம் நடத்திவந்தனர்.
மாணவர்கள் , இளைஞர்கள் , பெண்கள் , குழந்தைகள் இருந்ததால் போலீசார் சற்று பொறுமையாகவே இந்த பிரச்சனையை கையாண்டனர் . சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கலைந்து செல்ல மறுத்த இளைஞர்களை போலீசார் வேண்டுகோள் வைத்தும் கலையவில்லை.
இதனால் நேற்று நள்ளிரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். காலையில் களத்தில் போலீசார் இறங்கினர். முதலில் வேண்டுகோள் வைத்தனர். பின்னர் நேரடியாக களத்தில் இறங்கி அமைதியான முறையில் போலீசார் அவர்களை கலைந்து செல்ல பணித்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த முயற்சியின் விளைவாக சில நூறு இளைஞர்கள் தவிர அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு மெரினா கடற்கரை முழுதும் 90% போலீசாரின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.