
விடாது கறுப்பு …கடலுக்குள் இருந்த கறுப்பு கொடியுடன் வந்த போராட்டக்கார்கள்…
இன்று சட்டப் பேரவை கூடவுள்ளதாலும், குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் போலீசாரின் ஒத்திகை நடக்க உள்ளதாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றும் வேலையில் காவல்துறை இறங்கியுள்ளது.
இன்று அதிகாலை மெரினா கடற்கரையில் இருந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி காவல்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் அவர்கள் அங்கிருந்து வெளியேறாததால் காவல் துறையினர் அவர்களை வலுக்கட்டாய்மாக வெளியேற்றத் தொடங்கினர்.
அவசரச்சட்டம் குறித்து சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர், ஆனால் போலீசார் அவர்களை எப்படியாவது வெளியேற்ற முயன்று வருகின்றனர்.
இதனை ஏற்க மறுத்த போராட்டக்குழுவினர் கடலை ஒட்டிச் சென்றும் கடலில் இறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை நெருங்கினால் கடலில் குதிப்போம் என எச்சரித்தனர். அதே நேரத்தில் கடற்கரைக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் போலீசார் அடைத்துவிட்டதால் வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏராளமான போராட்டக்கார்கள் பட்டினப்பக்கம் பகுதியில் இருந்து படகுகள் மூலம் கடற்கரைக்கு வந்து சேர்ந்து சேருகின்றனர். இதனால் உற்சாகம் அடைந்துள்ள போராட்டக்குழுவினர் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.