
மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் அதே வேலையில் கடற்கரையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பண்யும் துவக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்காக போராடும் லட்சக்கணக்கான இளைஞர்களில் பெரும்பாலானோர் போராட்டத்தை கைவிட்ட நிலையில் முக்கிய போராட்டக்களமான மெரினா கடற்கரையில் குவிந்திருந்த பொதுமக்கள், இளைஞர்கள் நேற்றிரவு முதல் கடறகரியிலிருந்து கலைந்து சென்றனர்.
கலைய விரும்பாத கூட்டத்தினருக்கு காலையில் போலீசார் வேண்டுகோள் வைத்து வெளியேற்றினர்.அதிலும் சில நூறு இளைஞர்கள் கலைய மறுத்து கடலுக்குள் இறங்கி கைகோர்த்து நின்றனர்.
அவர்களுடன் கூடுதல் ஆணையர் தெற்கு ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனிடையே மறுபுறம் அரசு எந்திரங்கள் துரித கதியில் தங்கள் பணியை ஆரம்பித்துவிட்டனர்.
6 நாட்களுக்கும் மேலாக லட்சக்கணக்கானோர் குவிந்திருந்ததால் குப்பை கூளமான மெரினா கடற்கரையில் மணல் பரப்பு முழுவதையும் சென்னை மாநகராட்சியினர் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கடற்கரை சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை முதல் குடியரசு தின ஒத்திகை துவங்கும் என தெரிகிறது.
மறுபுறம் குடியரசு தினத்துக்காக மேடை , தடுப்புகள் அமைக்கும் பணியும் துவக்கப்பட உள்ளது.