நல்ல செய்தி....!!! ஜல்லிக்கட்டுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

Asianet News Tamil  
Published : Jan 20, 2017, 02:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
நல்ல செய்தி....!!! ஜல்லிக்கட்டுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

சுருக்கம்

தமிழக அரசின் சட்ட முன்வடிவுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விரைவில் ஜனாதிபதியின் கையெழுத்துக்கு கொண்டுசெல்லப்படும் வாய்ப்பு உள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரம் நாளுக்கு நாள் பேரெழுச்சியாக மாறி வருகிறது. சாதரணமாக அலங்காநல்லூரில் போலீசாரின் தடியடியால் ஆரம்பித்த பிரச்சனை மெரீனாவில் வளர்ந்து ஆலமரம் போல் தமிழகம் முழுவதும் போராட்டக்களமாக விரிந்துள்ளது.

நாளுக்கு நாள் பெரிதாகும் போராட்டக்களம் இன்று தொழிலாளிகள், அரசு ஊழியர்கள், கலைத்துறையினர், வணிகர்கள் என பல்வேறு துறையினர் ஆதரவாக போராடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமரை சந்தித்த ஓபிஎஸ் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர கேட்டு கொண்டார்.

வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களால் இயலாது என்ற கூறிய மத்திய அரசு, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் அதற்கான முழு அனுமதியும் பெற்று தர தாங்கள் முயற்சிப்பதாக தெரிவித்தது.

இதனையடுத்து சட்ட வல்லுனர்களுடன் டெல்லியில் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் தலைமை  வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மாநில அரசே அவசர சட்டம் கொண்டு வர சட்டத்தில் வழியுண்டு என்று மத்திய சட்டம் மற்றும் நீதிகளுக்கான ஆணையத்தில் தெரிவத்தார்.

இதையடுத்து டெல்லியில் இன்று காலை பேட்டியளித்த முதல்வர் ஓபிஎஸ் தமிழக அரசு ஜல்லிகட்டுகாக அவசர சட்டம் கொண்டு வரவுள்ளது. மாநில அரசின் சார்பில் சட்ட வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு அதற்கான வேலைகளை செய்யும் என்று தெரிவித்தார்.

சட்டவல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட தமிழக அரசின் சட்டவரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக எம்பிக்களும் சந்தித்தனர்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக அரசின் சட்ட வரைவுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அனுமதி அளிக்கப்பட்டதால் உடனடியாக சட்டவரைவு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். 

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி