
நாளை ஜல்லிக்கட்டு நடக்க அவசர சட்டம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கும் நிலையில் நாளை அலங்காநல்லூரில் முதல்வர் ஓபிஎஸ் ஜல்லிகட்டை துவக்கி வைக்கலாம் என்று தெரிகிறது.இதற்காக அவர் மதுரை புறப்பட்டு செல்ல உள்ளார்.
ஜல்லிகட்டுக்கு ஆதரவாக எழுந்த மாணவர் எழுச்சி காரணமாக இறங்கி வந்த மத்திய மாநில அரசுகள் உடனடியாக அவசர சட்டம் இயற்றி உள்ளன.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் இன்று இரவுக்குள் அவசர சட்டம் வெளியாகலாம்.
அப்படி வெளியாகும் படசத்தில் உடனடியாக ஜல்லிகட்டை நடத்த தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.
இதற்கான முயற்சிகளை நேற்றிலிருந்தே தமிழக அரசு துவக்கி வைத்தது.
மதுரை கலக்டர் வீர ராகவ ராவ் இதற்கான பணிகளை செய்து வருகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தால் தானே துவக்கி வைக்கவுள்ளதாக முதல்வர் ஓபிஎஸ் ஏற்கனவே பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவசர சட்டம் வெளியானால் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஓபிஎஸ் துவக்கி வைப்பார் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு எதுவாக ஓபிஎஸ் மதுரை செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.