உண்டா..?? இல்லையா..?? - தமிழகத்தை துச்சமாக மதிக்கும் மோடி...

Asianet News Tamil  
Published : Jan 19, 2017, 12:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
உண்டா..?? இல்லையா..?? -  தமிழகத்தை துச்சமாக மதிக்கும் மோடி...

சுருக்கம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தொண்டை தண்ணீர் வற்ற கத்தி கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்.

வரலாறு காணாத போராட்டமோ புவியியல் காணாத போராட்டமோ என கிண்டலும் நக்கலும் அடிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை உள்ளது.

ஆரம்பத்தில் போராட்டத்தை ஒடுக்கிய தமிழக அரசு போராட்டத்தின் வீரியத்தை பார்த்து அவசர அவசரமாக அடுத்தகட்ட நடவடிக்கைக்கு டெல்லி சென்றார் முதலவர்.

உடனடியாக அப்பாயின்ட்மென்ட் கொடுத்த மோடி வழக்கம்போல தீர்க்கமான முடிவையோ அறிவிப்பையோ தெரிவிக்கவில்லை.

கோர்ட்டில் வழக்குஇருக்கிறது என்பது ஊரறிந்த விஷயம்.

இதையே மீண்டும் போராட்டக்கார்களுக்கு சொல்ல மோடி எதற்கு பிரதமராக உள்ளார்? என ஆவேசக்குரல் எழுப்புகிறார்கள் ஆரப்பாட்டக்கார்கள்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தமிழர்களின் உணர்வோடு கலந்த இந்த கலாச்சாரத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை மட்டுமே தங்களுக்கு தேவை என்றும் இலவச ஆலோசனைகள் மோடியிடமிருந்து தங்களுக்கு தேவையில்லை என்றும் பொங்குகின்றனர் ஆர்பாட்டக்காரர்கள்.

இறுதியாக மோடியிடம் போராட்டக்கார்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்...

அது ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு உண்டா இல்லையா?

PREV
click me!

Recommended Stories

குடும்பத்தினருக்கு மட்டுமே பதவியா? எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய சரத்குமார்
பதநீர் இறக்கியவரை சுடச்சொன்னது யார்?! இந்த ஆட்சியை நாம் டிஸ்மிஸ் செய்வோம்.!