சீறிப்பாயும் காளைகள்.. துள்ளிக்குதித்து அடக்கும் காளையர்கள்.. களைகட்டும் ஜல்லிக்கட்டு..

 
Published : Jan 29, 2017, 04:19 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
சீறிப்பாயும் காளைகள்.. துள்ளிக்குதித்து அடக்கும் காளையர்கள்..  களைகட்டும் ஜல்லிக்கட்டு..

சுருக்கம்

சென்னை மெரினா உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 

நடந்த போராட்டத்தை தொடர்ந்து, 

மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில், தமிழகஅரசு அவசர சட்டம் கொண்டு வந்து, அதை 

சட்டசபையிலும் நிரந்தர சட்டமாக நிறைவேற்றியது. 

இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு 

நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். 

மஞ்சுவிரட்டுக்கு புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டம் சிராவயலில் இன்று மஞ்சுவிரட்டை

தமிழக அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,

நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட காளைகள்

மஞ்சுவிரட்டில் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.

முன்னதாக உச்சநீதிமன்ற வழிகாட்டதலின்படி காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம்  மணப்பாறையை அடுத்த கருங்குளம் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு

இன்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. . இதில், 600காளைகள் பங்கேற்றன. 350 மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். 

பாதுகாப்புக்காக, 1000 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் ஜல்லிக்கட்டின்போது பின்பற்றப்படுகிறதா என திருச்சி மாவட்ட ஆட்சியர்

பழனிச்சாமி அடிக்கடி ஆய்வு செய்தார்.

இதே போன்று சிவகங்கை மாவட்டம் தமராக்கி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துரை அடுத்த சேது

நாராயணபுரம் ஆகிய கிராமங்களில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

ஓசூரில் இன்று நடைபெற்ற எருதுவிடும் விழாவில் ஏராளமான காளைகள் பங்கேற்றன.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!