
கொள்ளையடிக்க வந்த ஆசாமிகள் நாங்கள் சத்தம் போடாமல் இருக்க வாய்க்குள் துப்பாக்கி வைத்து மிரட்டினார்கள் என்று வேலைக்காரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
வடமாநிலம் போன்று சென்னையிலும் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதம் முன்பு யானைக்கவுனியில் ட்ராவல்ஸ் அதிபர் துப்பாகியால் சுட்டுகொள்ளப்பட்டார்.
ராயபுரத்தில் துப்பாக்கி முனையில் அடகு கடையிலிருந்து நகைகள் கொள்ளையடிக்கபட்ட்ன.
இது போன்ற பல சம்பவங்கள் சென்னையில் பெருகி வருகிறது.
தற்போது சென்னை ஐஸ் ஹவுசில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் மூன்று கொள்ளையர்களும் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர்.
கொள்ளையர்கள் துப்பாக்கியை நீட்டியபோதும் துணிச்சலாக சத்தம் போட்டு கொள்ளையர்களை பிடித்து கொடுத்த வேலைக்காரி வனிதாவை அனைவரும் பாராட்டினர்.
வனிதா சத்தம் போட்டிருக்காவிட்டால் 500 பவுனுக்கு மேல் நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பார்கள்.
கொள்ளை நடந்தது பற்றி வேலைக்காரி வனிதா கூறியதாவது
மொத்தம் மூன்று பேர் உள்ளே வந்தனர்.சாதாரணமாக இந்தியில் பேசிக்கொண்டிருந்தனர். நான் என் முதலாளியின் நண்பர்கள் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் திடீரென துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர்.
என் முதலாளி முன்னா லால் வாயிலும் துப்பாக்கியை நுழைத்து சுட்டு விடுவேன் என்று மிரட்டி நகைகளை கொள்ளையடித்தனர்.
அவர்கள் அசந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் கூச்சலிட்டேன்.
எங்கள் வீடு பரபரப்பு மிகுந்த பொதுமக்கள் புழங்கும் சாலை என்பதால் உடனடியாக பொதுமக்கள் ஓடி வந்தனர்.
சத்தம் போட்ட என்னை கொள்ளையர்கள் தாக்கினாலும் பொதுமக்கள் திரண்டதால் அவர்கள் தப்பி ஓடினர்.
அதில் ஒருவனை பொதுமக்கள் பிடித்து விட்டனர்,
சினிமாவில் மட்டும்தான் இது போன்ற காட்சிகளை பார்த்திருக்கிறேன்.
ஆனால் நேரில் நிஜ வாழ்கையில் என் வாழ்கையிலேயே இப்படி நடக்கும் என்று எதிர்பார்கவில்லை.
எப்படியோ என் உயிரை பொருட்படுத்தாமல் கொள்ளையர்களை பிடிக்க உதவியது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரை பொதுமக்கள் போலீசார் வெகுவாக பாராட்டினர்.