சென்னையை அடுத்து மதுரை...!!! பரவுகிறது இளைஞர்கள் எழுச்சி..!!!

First Published Jan 9, 2017, 12:01 PM IST
Highlights


தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்படுகிறது. 

ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன மதுரை மாவட்டம் அலங்காநல்லுர், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சோகத்துடன் உள்ளனர்.

ஜல்லிகட்டுக்கு எப்படியாவது அனுமதி கிடைத்துவிடும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளகளும், காளை வளர்ப்போரும் காளைகளை தயார் செய்து வருகின்றனர்

மதுரை,தேனி மாவட்ட மக்கள் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிகட்டை நடத்திகே தீர வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு வேலைசெய்து வருகின்றனர்.

உச்சசீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை என்றாலும் கூட தடையை மீறி ஜல்லிகட்டு நடத் வேண்டும் என கூறி வருகின்றனர். ஜல்லிகட்டு நடத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பை ஒழிக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு தங்களது காளைகளை தயார் செய்து வருகின்றனர் காளை வளர்ப்போர். அதேபோல் மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க தங்களது தோள்களை தயார் செய்து வருகின்றனர்.

ஏராளமான கிராம மக்கள் ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கலை கொண்டாடப்போவதில்லை என சோகத்துடன் கூறி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கல்லுரி மாணவர்கள் இன்று மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்த திட்டமிட்டுருந்தனர்.

இதற்காக Face Book,Twitter மூலம் கல்லுரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் இன்று மதுரை கோரிப்பாளையம் அருகே திரண்டனர்.

அவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்திக் கொண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குரல் எழுப்பினர். தடையை மீறி இந்த ஆண்டு ஜல்லிக்கட்ட‘டு நடத்தியே தீருவோம் என அவர்கள் சூளுரைத்தனர்,

மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு தடையாக இருக்கும் பீட்டா அமைப்பை இந்தியாவை விட்டே துரத்துவோம் என்று சபதம் ஏற்றனர்.

தொடர்ந்து மாட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்ற கல்லுரி மாணவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

click me!