"அதகளம் பண்ணும் காளைகள்...!! அடக்க முடியாத வீரர்கள்…" - இது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Asianet News Tamil  
Published : Feb 05, 2017, 11:05 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
"அதகளம் பண்ணும் காளைகள்...!! அடக்க முடியாத வீரர்கள்…" - இது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

சுருக்கம்

அவனியாபுரம் இன்று கோலகலமாக காட்சி அளிக்கிறது  காரணம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்  உற்சாகமாக நடைபெறும் ஜல்லிக்கட்டுதான்…தடைகள் பல கடந்து இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, தேனி ,திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 900 க்கும் மேற்பட்ட காளைகளும், 750 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் இதில் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.

அமைச்சர் உதயகுமார் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து துள்ளி புறப்பட்ட காளைகளை வீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.

பல்லாயிரக்கணக்கான  பார்வையாளர்கள் இதில் கலந்து கொண்டு வீரர்கள் மாடுகளை அடக்குவதை உற்சாகமாக கண்டு ரசித்தனர். பெரும்பாலன மாடுகளை வீரர்கள் வாடிவாசலில் இருந்து வெளியே வந்ததுமே அடக்கினர்.

காளைகளை அடக்கியவர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. ஒரு சில காளைகளை வீரகள் அடக்க முடியாமல் திணறினர். வீரர்களுக்கு போக்கு காட்டியபடியே அசையாமல் நின்ற காளைகளின் அருகிலேயே செல்ல முடியாமல் வீரர்கள் தவித்தனர்.

மாடுபிடி வீரர்களால் அடக்க முடியாத காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்ற வருகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டள்ளது,

 

PREV
click me!

Recommended Stories

தனியார் பள்ளிகளுக்கு டப் கொடுக்க போகும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.! ஜனவரி 19 முதல் 5 நாட்களுக்கு.!
அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அதிரடி நீக்கம்.. அசராமல் சாட்டையை சுழற்றும் இபிஎஸ்!