அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி...!!! - முதலமைச்சரின் 2 செயலாளர்களும் விடுவிப்பு

Asianet News Tamil  
Published : Feb 05, 2017, 10:05 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி...!!! - முதலமைச்சரின் 2 செயலாளர்களும் விடுவிப்பு

சுருக்கம்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு  தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினமா செய்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய அதிகாரிகளில் முக்கியமானவர் ஷீலாபாலகிருஷ்ணன். 1976 பேட்ச்  ஐஏஎஸ் அதிகாரியான இவர் துறை செயலாளராக இருந்து பின்னர்  2012 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் தலைமை செயலாளர் ஆக்கப்பட்டார்.

பின்னர்  2014 ல் ஓய்வு பெற்ற இவரையும் , டிஜிபி ராமானுஜத்தையும் அரசு மற்றும் காவல் துறை ஆலோசகர்களாக நியமித்தார். பின்னர் ராமானுஜம் தகவல் ஆணையரானார். ஷீலா பாலகிருஷ்ணன் முதல்வருக்கு அடுத்து அனைத்துமாக இருந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென தனது பதவியை ஷீலா பாலகிருஷ்ணன் ராஜினமா செய்தார்.

இந்த நிலையில், முதல்வரின் செயலாளர்–1 கே.என்.வெங்கடரமணன் மற்றும் செயலாளர்–4 ஏ.ராமலிங்கம் ஆகியோரும் தங்கள் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கே.என்.வெங்கடரமணன் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்.

செயலாளர்–4 ராமலிங்கத்துக்கு ஒய்வு பெறுவதற்கு இன்னும் சிலகாலம் இருக்கிறது. தற்போது முதல்–அமைச்சர் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரது இடமாற்றம் குறித்த விவரங்கள் உடனே வெளியிடப்படவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக அரசின் முதன்மை செயலாளர்களாக இருந்த அவர்கள் 3 பேரும் விடுவிக்கப்பட்டு இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!
தனியார் பள்ளிகளுக்கு டப் கொடுக்க போகும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.! ஜனவரி 19 முதல் 5 நாட்களுக்கு.!