ஜல்லிக்கட்டு கலவர விசாரணை - 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!

 
Published : Aug 01, 2017, 05:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
ஜல்லிக்கட்டு கலவர விசாரணை - 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!

சுருக்கம்

jallikattu case extended

ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணையில் அறிக்கை தாக்கல் செய்ய ஒய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரனுக்கு கூடுதலாக 4 மாத கால அவகாசம் தமிழக அரசு கொடுத்துள்ளது.

ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழக மக்கள் போராட்ட களத்தில் குதித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் எழுச்சி கிளம்பியது.

இதைதொடர்ந்து அவசரம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது தமிழக அரசு. இதனிடையே மாணவர்கள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள் களமிறங்கி விட்டதாக கூறி போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஜல்லிகட்டு வன்முறை குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்தப்படும் எனவும்   அப்போதைய முதலமைச்சர் ஒபிஎஸ் தெரிவித்தார்.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமனம் செய்யப்பட்டார்.  இதுகுறித்த அறிக்கை 3 மாதத்தில் தாக்கல் செய்ய செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.  

இந்நிலையில்,  ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணையில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசிடம் கூடுதலாக 4 மாத கால அவகாசம் வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் கேட்டிருந்தார். அதன்படி அவருக்கு 3 மாதம் கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!