
அறப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி…ஜல்லிக்கட்டு சட்ட மசோதாசட்டப் பேரவையில் நிறைவேற்றம்.
ஜல்லிக்கட்டு நடத்தவது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூடியது.
இதையடுத்து, முதலமைச்சர் ஓபிஎஸ், விலங்குகள் வதை தடுப்பு சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) 2017ல் திருத்தம் செய்யும் வகையில்
சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த சட்ட மசோதா மீது உரையாற்றிய ஓபிஎஸ், சட்டத்தை நிறைவேற்ற தான் எடுத்த முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தார்.
.இதன்பிறகு ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.மேலும் இந்த சட்டத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்த சட்டம் இனிமேல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் ஒப்புதல் கொடுத்த பிறகு அது ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டமாக மாறிவிடும் என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் வெற்றி கிடைத்துள்ளது.