தன்னெழுச்சி இளைஞர்கள் போராட்டமும் - தரமற்ற சிலரது நடவடிக்கைகளும்..!!!

Asianet News Tamil  
Published : Jan 17, 2017, 04:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
தன்னெழுச்சி இளைஞர்கள் போராட்டமும் - தரமற்ற சிலரது நடவடிக்கைகளும்..!!!

சுருக்கம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடிவரும் நேரத்தில் ஆங்காங்கே விஷமிகள் சில ஊடகங்களின் மீது பாயும் போக்கும் தலை தூக்கி உள்ளது.

தனியார் தொலைக்காட்சி வேனை திருப்பி அனுப்பியது. செய்தியாளர்களை தாக்க வந்தது போன்ற நாகரீகமற்ற காரியத்திலும்  சிலர் ஈடுபட்டனர். 

எந்த ஒரு போராட்டமும் அது மக்களிடம் கொண்டுச்செலப்பட வேண்டும் உலகம் முழுக்க அது பரவ வேண்டுமென்றால் அதற்கு ஊடகங்கள் பங்களிப்பு இல்லாவிட்டால் அது வெற்றி பெறாது. சமூக வலைதளங்கள் என்னதான் உதவினாலும் அது தனிநபர்களின் செயல்பாடாக அமையும்.

அதில் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. உணர்ச்சிகளை தூண்டிவிடும் நிலைக்கு கொண்டு செல்லும் வேலையை சில நேரம் சமூக வலைதளங்கள் செய்யும் .

இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூக வலைதளங்கள் பெரிய அளவில் செயல்பட்டதாக பாராட்டப்பட்டாலும், இதுவே ஒரு மதக்கலவரம் , இனக்கலவரம் போன்ற நேரத்தில் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வதந்தியை பரப்பி விட வாய்ப்பு உண்டு.

இதற்கு சிறந்த உதாரணம் நேற்று ஜல்லிக்கட்டில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று வாட்ஸ் அப் சமூக வலைதளத்தில் பரப்பபட்டது. ஆனால் ஊடகங்கள் அதை விசாரித்து உண்மையல்ல என்று தெரிவித்தன. 

இது போன்று ஊடகங்களுக்கு பொறுப்பு உண்டு ஊடக செய்திகளுக்கும் பொறுப்பு இருக்கும் . ஜல்லிக்கட்டு விவகாரத்தை பெரிய அளவில் விவாத பொருளாக்கி அதில் பல தரப்பு மக்களிடம் கொண்டு சென்று பொதுமக்களிடம் கோபாவேசத்தை உருவாக்கியதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

போலீசாரின் அடக்குமுறையை கண்டித்தும் , அதற்கு ஆதரவான தலைவர்களை பேட்டி அளிக்கவைத்தும் அழுத்தத்தை கொடுப்பதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

எல்லாவற்றையும் தாண்டி ஊடவியலாளர்கள் அனைவரும் தமிழர்கள், பெரும்பாலானோர் இளைஞர்கள் பல தளங்களில் அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உள்ளனர். 

ஆனால் எப்போதும் நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது போல் போராட்டம் நடத்துவது ஒருபக்கம் என்றால் போராட்டத்தில் ஈடுபடுகிறேன் பேர்வழி என்ற பெயரில் உணர்ச்சி வயப்பட்டு ஊடகங்கள் மேல் பாய்வதும் ஊடக நிறுவனத்தின் மீதுள்ள கோபத்தை தளத்தில் செய்தி சேகரிக்க வரும் குழுவினர் மீது பாய்வதும் , தாக்க முயல்வதும் புதிய கலாச்சாரமாக உருவாகி வருகிறது.

 இதுவல்ல நடைமுறை நியாயமான போராட்டம் என்றால் அது வலுப்பெறும் எல்லோரும் ஆதரிப்பார்கள். களத்தில் நின்று போராடுவதால் மட்டும் அவர் போராட்டத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிட மாட்டார்.

அதை செய்தியாக்கி உலகமறிய செய்பவரும் ஒரு வகையில் உதவுகிறார் அவரது கடமையை ஆற்றுகிறார் எனபதே உண்மை.

போராட்டம் வேண்டும் ,யாருக்கெதிராக போராடுகிறோம் என்பது நோக்கமாக இருக்க வேண்டும். முன்னோக்கிய பார்வை இருக்க வேண்டும். உடனிருப்பவன் உதவி செய்பவனை தக்குவது மிரட்டுவது நல்ல நடைமுறையாக இருக்காது. 

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அனைத்து சானல்களும் அவரவர் நிலைக்கேற்ப செய்தியை சேகரித்து வெளிப்படுத்தினர். அதில் ஒரு சானலை மட்டும் மையப்படுத்தி அவர்கள் மட்டுமே உண்மைகளை உரக்க சொன்னார்கள் என்ற தோற்றம் வலைதளங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. இதனால் இளைஞர்கள் மற்ற ஊடகங்களின் செய்தியாளர்களை மிரட்டினர். கண்டபடி ஏசினர்.

ஆனால் அவர்கள் விரட்டிய அந்த சானல் நள்ளிரவு முழுதும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் பேட்டியை எடுத்து போட்டு அலங்காநல்லூர் போராட்டத்தில் துணை நின்றது. இதே போல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஒரு சானலின் வேனை அலங்கா நல்லூரில் மிரட்டி திருப்பி அனுப்பினர் இதுவும் தவறான ஒன்று .

அந்த சானலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்தனர். ஆனால் ஏற்கனவே பர்ப்பப்பட்ட வெறுப்பின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் உண்மைகளை பார்க்க மறுத்தனர். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

PREV
click me!

Recommended Stories

குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏப்ரல் 21ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!
தேர்தலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பு! பேருந்து நிலையங்கள் திடீர் மாற்றம்!