ஸ்டாலினுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த ஜெயின் பெண்கள்...

Asianet News Tamil  
Published : Aug 07, 2017, 02:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
ஸ்டாலினுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த ஜெயின் பெண்கள்...

சுருக்கம்

Jain Women Rocky tie to dmk action leader stalin

திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு சென்னையில் வசிக்கும் வட இந்திய பெண்கள், ராக்கி கயிறு கட்டி ரக்சா பந்தன் விழாவைக் கொண்டாடினர். ரக்சா பந்தன், விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ரக்சா பந்தன் விழாவையொட்டி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து, நெல், கோதுமை முதலான தானியங்கள், இனிப்புகள், பணம், சந்தனம், குங்கும் வைத்து விளக்கேற்றினார்கள்.

சகோதரிகள், தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கயிற்றை கட்டி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். 

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கும், எல்லையில் போராடும் ராணுவ வீரர்களுக்கும் பெண்கள் ரக்சா பந்தன் கட்டினர்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெயின் சமூகத்தை சேர்ந்த பெண்கள் ராக்கி கட்டி அன்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி