ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு நல்ல செய்தி..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..!

By ezhil mozhiFirst Published Jan 26, 2019, 2:44 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்து இருந்த உயர்நீதிமன்றம் 25 ஆம் தேதிக்குள் அதாவது நேற்றுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என தெரிவித்து இருந்தது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு நல்ல செய்தி..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..! 

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்து இருந்த உயர்நீதிமன்றம் 25 ஆம் தேதிக்குள் அதாவது நேற்றுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என தெரிவித்து இருந்தது.

ஆனால் இன்று 26 ஆம் தேதி குடியரசு தினவிழா என்பதால் அரசு  விடுமுறை, அதே சமயத்தில் ஒரு நாட்டு குடிமகனாக ஒரு சில ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிக்கு சென்று கொடியேற்றும்  நிகழ்வில் பங்கேற்று வந்துள்ளனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சிலரை, அந்தந்த மாவட்டத்தில்  போலீசார் கைது செய்து,15  நாள் காவலில் வைத்து உள்ளனர்.

இவர்களில் பலரை வரும் திங்களன்று நீதிமன்றத்தின் முன் நிறுத்த உள்ளனர் போலீசார். இப்படி எல்லாம் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தும் போராட்டம் முடிவுக்கு வர வில்லை என்பதால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அதாவது, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் ஏற்கப்படும், அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்து உள்ளார்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்து உள்ளார் 

ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், சாத்தியமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் முதல்வருடன் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளார். இதன் மூலம் அரசு தரப்பிலிருந்து போராட்டம் குறித்து இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக, "ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் ஏற்கப்படும், என்றும் அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளதை அடுத்து அரசு தரப்பில் இருந்து நல்ல முடிவு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.செங்கோட்டையனின் இந்த சொல், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை சற்று நிம்மதி மூச்சு விட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!