கொடி ஏற்றிய போது செல்போனில் பேசிய அரசு அதிகாரி! வைரலாகும் வீடியோ!!

Published : Jan 26, 2019, 01:49 PM ISTUpdated : Jan 26, 2019, 02:00 PM IST
கொடி ஏற்றிய போது செல்போனில் பேசிய அரசு அதிகாரி! வைரலாகும் வீடியோ!!

சுருக்கம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசியக் கொடி ஏற்றிய போது ரயில்வே அதிகாரி ஒருவர் செல்போனில் பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக  வைரலாகி வருகிறது.

70ஆவது குடியரசு தின விழா இன்று  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால்  கொடி எற்றி வைத்தார். அதேபோல,  மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளிலும் குடியரசு தினம்  கொண்டாடப்படும் நிலையில்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும்  ஒவ்வொரு ஆண்டும் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டும் ரயில் நிலைய  வாசலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது தேசிய கீதம் போட்ட போது ரயில்வே அதிகாரி இப்ராகிம் செல்போனில் பேசியுள்ளார். அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து பேசும்  வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

PREV
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் மஜாவாக நடந்த பாலியல் தொழில்! உள்ளே புகுந்த போலீஸ்.. அந்த கோலத்தில் இருந்த பெண்கள்
பிராட்வே பேருந்து நிலையம் மூடல்.. ராயபுரம், தீவுத்திடலில் இயக்கப்படும் பஸ்களின் முழு விவரம்.. வெளியான முக்கிய அறிவிப்பு