கொடியேற்றும்போது போனில் பேச்சு... ரயில்வே உயரதிகாரியின் செயலால் அதிர்ச்சி!

By vinoth kumarFirst Published Jan 26, 2019, 1:13 PM IST
Highlights

நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசியக்கொடி ஏற்றும்போது அதிகாரி ஒருவர் செல்போனில் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசியக்கொடி ஏற்றும்போது அதிகாரி ஒருவர் செல்போனில் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் 70-வது குடியரசுத் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இதுதவிர அந்தந்த மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தனர். 

இதேபோல சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டும் சென்ட்ரல் ரயில் நிலைய முகப்பு வாயிலில் தேசியக் கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

அப்போது தேசியகீதம் இசைக்கப்பட்டபோது, ரயில் நிலைய துணை அதிகாரி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தாமல், போனில் பேசிக்கொண்டிருந்தார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரவாகி வருகிறது.

click me!