
கடந்த 3 நாட்களுக்கு முன் கோல்டு வின்னர் எண்ணெய் நிறுவனமான காளீஸ்வரி தொழிற்சாலை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் செயல்படுகிறது. இதன் உரிமையாளர் முனுசாமி.
கடந்த 3 நாட்களுக்கு முன் முன், காளீஸ்வரி நிறுவனத்தின் அனைத்து கிளைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள குடோன், நகைக்கடை, தொழிற்சாலை, சிவகாசியில் உள்ள குடோன் மற்றும் கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலத்தில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல், மீண்டும் வருமான வரித்துறையினர், காளீஸ்வரி நிறுவனத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள காளீஸ்வரி நிறுவனத்தின் உரிமையாளர் முனுசாமியின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
காளீஸ்வரி தனியார் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தின் 27 இடங்களில் சோதனை முடிந்துள்ளது. மேலும் 19 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.