
குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறு என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முன்னதாக டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகின. இந்த தேர்வில் சில பயிற்சி மையங்களில் படித்த தேர்வர்கள் அதிக அளவில் தேர்வாகினர். தென்காசியில், ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தகவல் வெளியாகின. இதுதொடர்பாக வெளியான தகவல்களால் பலருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையும் படிங்க: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்... அறிவித்தது பெருநகர போக்குவரத்து காவல்துறை!!
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் இதுக்குறித்து தற்போது டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கான பயிற்சி வழங்குவதில் குறிப்பிட்ட பகுதி என்பது முன்னணியில் இருக்கும்.
இதையும் படிங்க: நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி... டிவிட்டரில் ட்ரெண்டாகும் #Vanakkam_Modi!!
கடந்த காலங்களிலும் தட்டச்சர் பிரிவில் காஞ்சிபுரம் மற்றும் சங்கரன் கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரே பகுதியில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற காரணத்திற்காக எவ்வித முகாந்தரமும் இல்லாமல் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறானதாகும். எனவே குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறு என்று தெரிவித்துள்ளது.