சமையலுக்கு முக்கியத்தேவையான பூண்டின் விலை கடந்த சில தொடர்ந்து அதிகரித்து வந்த பூண்டானது இன்று ஒரு கிலோ 550 ரூபாயை எட்டியுள்ளது. இதனையடுத்து வெங்காயத்தின் விலையும் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூண்டும் சமையலும்
சமையலுக்கு முக்கிய தேவையான பூண்டு அனைத்து சமையல் அறையிலும் முக்கிய தேவையாக இருந்து வருகிறது. சைவ உணவில் இருந்து அசைவ உணவு வரை சமையலில் ருசியை அதிகரிக்கவும் முக்கிய தேவையாக உள்ளது. தக்காளி, வெங்காயம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ஒவ்வொரு சமையலிலும் நாம் தவறாமல் சேர்த்துக் கொள்ளும் உணவுப் பொருள் பூண்டு. உணவுக்கு நல்ல மனமூட்டியாகவும், ஆரோக்கிய பலன்களை கொண்டதாகவும் பூண்டு இருக்கிறது.
undefined
தமிழர்கள் மிக எளிமையாக சமைக்கின்ற ரசத்திலும் கூட 4, 5 பூண்டு பல்களை இடித்து போடுவது வழக்கம். பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்ட பூண்டு, நமக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. வைட்டமின் சி நிறைந்த, பூண்டு காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.
பூண்டு விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
இப்படி பல்வேறு பயனுள்ளதாக இருக்கும் பூண்டின் விலையானது கடந்த ஆண்டு இறுதியில் 300 ரூபாயாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ 500 முதல் 550 ரூபாய் வரை எட்டியுள்ளது. இதனால் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் பூண்டின் அளவை இல்லத்தரசிகள் வெகுவாக குறைத்துவிட்டனர். திடீர் பூண்டு விலை உயர்வுக்கு தமிழகத்தில் பெய்த மழை தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அதிகளவு மழை பொழிவால் பல இடங்களில் பூண்டு பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதே போல அண்டை மாநிலங்களாக கேரளா, கர்நாடக, ஆந்திரா ஆகிய இடங்களில் பூண்டு விவசாயம் பெரிதும் மழை நீரால் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து வட மாவட்டங்களில் இருந்தே பூண்டானது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு கொண்டுவரப்படுவதால் விற்பனை விலையானது அதிகரித்துள்ளது.
உயர காத்திருக்கும் வெங்காயத்தின் விலை
இதனிடையே பூண்டு விலைக்கு நிகராக வெங்காயத்தின் விலையும் வரும் நாட்களில் அதிகரித்த வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயம் 150 ரூபாய் வரை சென்றது. தற்போது ஒரு கிலோ 15 ரூபாய் என்ற அளவில் இருந்து படிப்படியாக உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் வெங்காயத்தின் விலையானது அதிகரிக்க கூடும் என தகவல் வெளியானது. இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்ததுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் இறுதி வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தக்காளி, வெங்காயம் விலை.. கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?