
தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த 12 ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அப்பொழுது, தனக்கு லேசான உடல் சோர்வு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவர் தனது இல்லத்தில் தனிமைபடுத்திக்கொண்டிருந்த அவர், மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார். அவரது உடல்நிலையை சி.டி ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர் இதனையடுத்து முதலமைச்சரின் நுரையீரலில் 10% பாதிப்பு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் முதலமைச்சர் இருப்பதாகவும், அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் இன்று வீடு திரும்புவார் என கூறப்பட்டது. இந்தநிலையில் காவேரி மருத்துவமனை சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா பாதிப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் நாளை வீடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஒரு வாரத்திற்கு முதலமைச்சர் வீட்டில் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பிலி இருந்து நாளை வீடு திரும்ப உள்ள நிலையில் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க தலைமைச்செயலகம் செல்லவுள்ளார்.
இதையும் படியுங்கள்