தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-24ல் 55.6% அதிகரித்து, 1,640 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
அதிகரிக்கும் குழந்தை திருமணம்
நவீன காலத்திற்கு ஏற்ப மக்கள் மாறி வரும் நிலையில், இன்னும் குழந்தைகள் திருமணம் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறும் சம்பவம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண் ஒருவர் கர்ப்பம் ஆன நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் வயதை மருத்துவர்கள் கேட்ட நிலையில் 16 வயது என்பது கூறியது அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல்நிலையத்துல் புகார் அளித்து வழக்கு பதியப்பட்டுள்ளது.
undefined
பெண் குழந்தைகள் திருமணம்
குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசால் புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையிலும், குழந்தை திருமணங்கள் நடைபெறுவது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதில் 2023-2024-ல் குழந்தை திருமணங்கள் 55.6% அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 1,054 குழந்தை திருமணங்களும், 2024-ல் 1,640 குழந்தை திருமணங்களும் நடைபெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 150 குழந்தை திருமணங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 133 திருமணங்களும் நடைபெற்று முன்னிலையில் உள்ளது.
இருமடங்காக அதிகரிப்பு
ஈரோடு மற்றும் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு குழந்தை திருமணம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டில் 70% குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் 65 சதவிகிதமும், 2024 ஆம் ஆண்டு 54% துணியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் உரிய வகையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்படும் சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்த தகவலில் தெரியவந்துள்ளது.