வங்க கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா..? எந்த நாடு பெயர் பரிந்துரைத்து .?

By Ajmal KhanFirst Published Dec 5, 2022, 10:33 AM IST
Highlights

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து வருகிற 8 அல்லது 9 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த மாண்டஸ் என்கிற பெயர் சூட்டப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

புயலுக்கு பெயர் வைக்க காரணம் என்ன.?

உலகத்தில் பல்வேறு நாடுகளில் கால நிலை மாற்றத்திற்கு ஏற்ப அவ்வப்போது புயல்கள் உருவாகும். இந்த புயலின் தாக்கத்தை கண்டறியும் வகையில் புயல்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் பெயர் வைத்து வருகின்றனர். அந்த வகையில் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியா நாட்டில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  1950க்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டியது. இந்தநிலையில்  வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல் உருவாகும் புயல்களுக்கு இந்திய மண்டலத்தில் உள்ள இந்தியா,பாகிஸ்தான், இலங்கை ,வங்கதேசம் மாலத்தீவு மியான்மர் ஓமன் மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைத்து வருகின்றனர். 

145 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி.. 3-வது தளத்துக்கு சீல் வைப்பு..!


புதிய புயலுக்கு பெயர் என்ன.?

பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ ஒரே இடத்தில் மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். எனவே ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது. இந்தநிலையில் தான் தமிழக கடல் பகுதியில் உருவான புயல்களுக்கு 2008 ஆம் ஆண்டு நிஷா என்கின்ற பெயரும்,

ஜெயலலிதா நினைவு நாள்..! பிளவுபட்ட அதிமுக..? நான்கு பிரிவாக அஞ்சலி செலுத்தும் நிர்வாகிகள்

 2010 ஜல் என்கின்ற பெயரும் வைக்கப்பட்டது.2011 ஆம் ஆண்டு தானே, 2012 ஆம் ஆண்டு நீலம் என்கின்ற பெயரும் வைக்கப்பட்டது.  இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு வர்தா புயலும் 2017 ஆம் ஆண்டு ஓக்கி புயலும் உருவானது. 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு கஜா என்கிற பெயரும் சூட்டப்பட்டது. இந்தநிலையில் தற்போது வங்ககடலில் உருவாகியுள்ள புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த மாண்டஸ் என்கிற பெயர் சூட்டப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

வங்கக்கடலில் உருவாகிறது புயல்..! மிக கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்

 

click me!