யாருக்கெல்லாம் ரூ.6000 நிவாரணத் தொகை கிடைக்கும்.? ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் கிடைக்குமா.? வெளியான தகவல்

By Ajmal Khan  |  First Published Dec 11, 2023, 1:24 PM IST

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில், குடும்பத்திற்கு 6ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், யாருக்கெல்லாம் நிவராண தொகை வழங்கப்படும் என்ற முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
 


சென்னையில் வெள்ளம்- நிவாரண உதவி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டி போட்டதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 109.41 செ. மீட்டர் மழை பெய்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அந்தப் பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற பல்வேறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதன் காரணமாக மக்கள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மீண்டும் எதிர்கொண்டதை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Latest Videos

undefined

யாருக்கெல்லாம் ரூ.6ஆயிரம் உதவி தொகை

இதனையடுத்து வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு இடங்களில் உணவு பொருட்களும் வழங்கப்பட்டது. இருந்த போதும் வீடுகளில் மழை நீர் புகுந்து அதிகப்படியான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தது.

அதன் படி சென்னை முழுவதும் வெள்ளம் பாதிக்கப்பட்டதால் அனைத்து வார்களுக்கும் நிவாரண தொகை 6ஆயிரம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே போல திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழுவதுமாக பாதிப்பு இல்லாமல் ஒரு சில பகுதிகளில் மட்டும் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டது. எனவே எந்த பகுதி பாதிப்பு என மாவட்ட ஆட்சியர்கள் இன்று அறிவிப்பு வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு கிடைக்குமா.?

இந்தநிலையில் மழை வெள்ள நிவாரணத் தொகை மூன்று பிரிவுகளாக வழங்க அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு நியாய விலைக்கடைகளில் ரொக்கமாக பணம் வழங்கப்படவுள்ளது. அடுத்தபடியாக ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்பித்திருப் போருக்கும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதன் படி  சென்னையில் பல ஆண்டுகளாக வசித்திருப்போர் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக வாடகை ஒப்பந்தம், சமையல் எரிவாயு ரசீது உள்ளிட்டவைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்றோ அல்லது நாளையோ அறிவிக்கப்படவுள்ளது. மேலும் வருகிற 20ஆம் தேதிக்குள் நிவாரண உதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

வெள்ளத்தில் சிக்கி முக்கிய ஆவணங்கள் மாயமா.? இலவசமாக பெற 46 சிறப்பு முகாம்.? வெளியான அறிவிப்பு

click me!