கோவில்களுக்கு தடையா ? புத்தாண்டில் கோவிலுக்கு செல்லலாமா ? அமைச்சர் சேகர் பாபுவின் பதில் என்ன ?

By Raghupati RFirst Published Dec 31, 2021, 8:03 AM IST
Highlights

புத்தாண்டு அன்று கோவில்களுக்கு செல்ல தடையா ? என்ற கேள்விக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்  இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று  நடைபெறும் கூட்டத்தில், தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,ஜனவரி 3 ஆம் தேதி முதல் 6 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில்லாமல் வகுப்புகள் நடத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில்,இதுகுறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் உள்ளது. 

ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,மீண்டும் ஒருநாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தலாமா ? அல்லது தற்காலிகமாக வகுப்புகளுக்கு தடை விதிக்கலாமா ? ஊரடங்கு போடுவதா ? என பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. அதற்கு பதில் அளித்து இருக்கிறார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. 'வருகின்ற புத்தாண்டு அன்று அனைத்து கோயில்களும் இரவு நேரத்தில் திறந்திருக்கும் . பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். 

புத்தாண்டு கொண்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு அன்று நள்ளிரவு கோயில்களில் சாமி தரிசனத்திற்கு தடையில்லை. மேலும் அரசு அறிவுறுத்தியுள்ள நோய்த்தடுப்பு முறைகளான தனி மனித இடைவெளி, முகக்கவசம் போன்ற விதிமுறைகளை மக்கள் கட்டயாம் பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

click me!