Tamilnadu : தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? முதல்வர் அவசர ஆலோசனை..அறிவிப்பு வெளியாக வாய்ப்பு ?

By Raghupati R  |  First Published Dec 31, 2021, 7:07 AM IST

ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.


தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயல் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் சென்னையில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் "கொரோனா பரிசோதனைகளையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அதிகரிக்க வேண்டும். தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளை தனிமைப்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

Tap to resize

Latest Videos

undefined

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் 1,088-ஆக இருந்த கொரோனா பாதிப்பு, டிசம்பர் 4-வது வாரத்தில் 1,720-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

எனவே சென்னையில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்,அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று காலை 11 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,ஜனவரி 3 ஆம் தேதி முதல் 6 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில்லாமல் வகுப்புகள் நடத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில்,இதுகுறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் உள்ளது. 

ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,மீண்டும் ஒருநாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தலாமா ? அல்லது தற்காலிகமாக வகுப்புகளுக்கு தடை விதிக்கலாமா ? ஊரடங்கு போடுவதா ? என பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

click me!