ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் இணையதளமான ஐஆர்சிடிசி முடக்கப்பட்டுள்ள நிலையில், தட்கல் டிக்கெட் உள்ளிட்ட ஆன் லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐஆர்சிடிசி இணையதள் சேவை
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியானது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்தான ரயிலாகும். ரயில் பயணத்தில் தங்களது இருக்கையை முன் பதிவு செய்த ஐஆர்சிடிசி முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 4 மாதம் முன் கூட்டியே தங்களது பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளமுடியும். இந்தநிலையில் இன்று காலை முதல் ஐஆர்சிடிசியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பிரச்சனையானது ஏற்பட்டது.
E- ticket booking is temporarily affected due to technical reasons. Technical team is working on it and booking will made available soon.
— IRCTC (@IRCTCofficial)
தொழில்நுட்ப கோளாரால் பாதிப்பு
காலை 10மணிக்கு ஏசி ரயில் பெட்டிக்கான டிக்கெட் முன்பதிவு, காலை 11 மணிக்கு இரண்டாம் வகுப்பு பெட்டிக்கான முன்பதிவு போன்றவை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டதாக ரயில் பயணிகள் சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து ஐஆர்சிடிசி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஐஆர்சிடியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லையென்றும்,
தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்யும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஐஆர்சிடிசி இணையதள சேவை பாதிப்பால் லட்சக்கணக்கான பயனிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்த ரயில் நிலையங்களுக்கே நேரில் சென்று தங்களது முன்பதிவு மற்றும் ரயில் டிக்கெட் ரத்து போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
Breaking news : தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்