
கட்சி அலுவலகம் மற்றும் தனது வீட்டை மர்மநபர்கள் சரமாரியாக தாக்கியதாக ஜெ.தீபா அளித்த புகார் பொய்யானது என்பது போலீஸார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன், தியாகராய நகர் சிவஞானம் தெருவில் உள்ள தனது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைமை அலுவலகத்தை சில மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி சேதம் ஏற்படுத்தியதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், இந்த வழக்கில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தீபா பேரவை நிர்வாகி ராமச்சந்திரன் தான் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில், தனக்கு தீபாவிற்கும் ராமச்சந்திரனுக்கும் கொடுக்கல் வான்கள் பிரச்சனை இருப்பதால் போலீஸில் மாட்டிவிட திட்டமிட்டு சதி செய்திருப்பதாக கூறி அதற்கான போலீஸாரிடம் ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தீபா வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவ நடந்த அன்று மாலை ஏழு மணியில் இருந்து மறுநாள் காலை ஆறு மணிவரை கேமராக்கள் மொத்தமாக அணைத்து வைகபட்டிருந்ததால், சந்தேகம் வலுத்ததையடுத்து, இதனால் சந்தேகமடைந்த போலீசார் பக்கத்துக்கு வீட்டாரின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு 11 மணியளவில் வெளியில் வந்த தீபா தன்னுடைய ஆதரவாளர்களை உள்ளே போக சொல்லி கையை அசைக்கிறார். அவரது பாதுகாப்பாளர்கள் நாற்காலிகளை தூக்கி போட்டு கண்ணாடிகளை உடைப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
தீபாவின் இந்த நாடகம் விசாரணையில் அம்பலமானதால், அவரது பாதுகாவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தீபாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.